இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மோட்டார் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகிய இரண்டு விறுவிறுப்பான ரேஸ் காட்சிகள் இருப்பதால் அந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது
இதற்காக ஒரு டீமை தயாரிப்பாளர் போனிகபூர் சுவிஸ் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் ரேஸ் காட்சிகளுக்கான அனுப்ப அனுமதி கேட்பது உள்பட மற்ற பணிகளை செய்ய செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இந்த இரண்டு ரேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது