அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிப்ரவரி முதல் வாரம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பிலும் நாயகி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால் நாயகி யார் என்பது குறித்த முடிவை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க யாமி கவுதம், இலியானா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்தபோது அஜித் ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். இந்த நிலையில் அவரே வலிமையின் நாயகியாக அறிவிக்கப்பட்டால் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது