வெளிநாடெல்லாம் இல்லை… ஹைதராபாத்திலேயே படத்தை முடிக்கும் வலிமை படக்குழு?

சனி, 5 டிசம்பர் 2020 (10:51 IST)
வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக இருந்த படக்குழு இப்போது மொத்த படப்பிடிப்பையும் ஐதராபாத்திலேயே நடத்தி முடிக்க உள்ளது.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படப்பிடிப்பின்போது அஜித்துக்கு இலேசான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன . ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது; இந்த படப்பிடிப்பில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கடைசி கட்ட படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் நடத்த முடிவு செய்திருந்தார் இயக்குனர் ஹெச் வினோத். ஆனால் இப்போது மீதி படத்தை ஒரே கட்டமாக ஐதராபாத்திலேயே எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்