உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்... அரசை எச்சரிக்கை செய்த வைரமுத்து

செவ்வாய், 19 மே 2020 (18:01 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கடந்த பல ஆண்டுகளாக அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென மத்திய அரசு இதில் ஒரு மாற்றம் செய்துள்ளது
 
விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்திற்கு பதிலாக விவசாயிகள் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் உரிய தொகையை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்டத் திருத்த மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது
 
இந்த மசோதாவுக்கு அகில இந்திய அளவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு நிறுத்தினால் மின்மாற்றியில் கை வைத்தது போல் ஆகிவிடும் என்று அரசுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கவிதை பின்வருமாறு:
 
உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்