எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

Siva
வெள்ளி, 17 மே 2024 (08:33 IST)
எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் எழுதவில்லை என்ற கலைக்குறை தனக்கு இருந்ததாகவும் ஆனால் தொழில்நுட்பத்தால் அந்த குறை தீர்ந்துவிட்டதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நடித்த ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படத்தின் பாடலில் வைரமுத்து எழுதிய ’மலரே மெளனமா? என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து வீடியோ ஒன்றை நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவை பார்த்து வைரமுத்து ஆச்சரியமடைந்தார்.

இந்த வீடியோவை பார்த்தவுடன் தனக்கு எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை  தொழில்நுட்பத்தால் தீர்ந்தது என்றும் ஆனால் இன்னொரு குறை இருக்கிறது என்றும் இதை பார்க்க எம்ஜிஆர் இல்லையே என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எங்கிருந்தோ
எனக்கொரு பாடல் வந்தது
வியந்தும் மகிழ்ந்தும் போனேன்

அலிபாபாவும்
40 திருடர்களும் படத்தில்
எம்.ஜி.ஆரும் பானுமதியும் நடித்த
புகழ்பெற்ற பாடல் காட்சியோடு
நான் எழுதிய பாடல் ஒன்றைப்
பொருத்தியிருக்கிறார்கள்

எம்.ஜி.ஆருக்குப்
பாடல் எழுதவில்லையே
என்ற கலைக்குறை
தொழில்நுட்பத்தால் தீர்ந்தது

ஆனால்,
வேறொரு குறை வந்துவிட்டது

இதைக் கண்டு களிப்பதற்கு
எம்.ஜி.ஆரும் பானுமதியும்
இன்றில்லையே!

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்