இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “நான் பல முறை தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளேன். அப்படி நான் ஒருமுறை தற்கொலை எண்ணத்தில் இருந்த போது என்னைக் காப்பாற்றியது வடிவேலு சாரின் காமெடிதான்.” என மேடையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.