வடிவேலு சுந்தர் சி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் எப்போது?

vinoth

ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (13:07 IST)
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சுந்தர் சி கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த படம் கிடப்பில் போட்டுவிட்டு வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்