வாய்மை - திரைவிமர்சனம்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (17:00 IST)
சாந்தனு நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள வாய்மை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாந்தனு பாக்கியராஜ் மாற்றும் முக்தா பாணு முன்னணி ஆகியோர் கதாபாத்திரத்திரம் ஏற்க கவுண்டமனி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, மனோஜ் என பல மூத்த நடிகர்கள் கதைக்கு பலம் சேர்க்க கைக்கோர்த்துள்ளனர்.


 

 
பூர்ணிமா பாக்யராஜின் மகன் ப்ரித்வி கட்டிட தொழிலாளியாக வேலை செய்கிறார். அவர் பணிபுரியும் இடத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். அவரை ஒரு கும்பல் கொலை செய்து விடுகிறது. அந்த கொலை பழி ப்ரித்வி மேல் வருகிறது. அதற்காக ப்ரித்வி தூக்கிலிடப்படுகிறார்.
 
பூர்ணிமா பாக்கியராஜ்க்கும் அந்த கொலையில் தொடர்பு உள்ளது என அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் பெண் ஒருவருக்கு எப்படி தூக்கு தண்டனை விதிக்க முடியும் என்று எதிர்ப்புகள் வலுக்கிறது. அதைத்தொடர்ந்து 12 பேர் கொண்ட குழு அவருக்கு தூக்கு தண்டனை வழங்கலாமா என்று விவாதம் செய்கிறது. இந்த 12 பேர் கொண்ட குழுவின் விவாதம் தான் மீதிக்கதை. இறுதியில் தண்டனை வழங்கப்பட்டதா? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
 
படத்தில் 12 பேர் கொண்ட குழுவின் விவாதம் தான் முக்கிய பகுதியாக மிக கவனத்துடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. படத்தில் தெறிக்கவிடும் வசனங்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. சாந்தனு நடிப்பில் தற்போது சற்று முன்னேற்றம் கண்டுள்ளார். கவுண்டமணியின் கவுண்டர் வசனங்கள் குறைவாக இருந்தாலும் கதைக்கேற்ற வசனங்களை பேசியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளும், வசங்னங்களும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.
 
படத்திற்கு தேவையான கதாபாத்திரத்தை தேர்வு செய்ததில் இயக்குனர் சொதப்பியிருக்கிறார். கதைக்கு பொருந்தாத நடிகர்கள் படத்தின் பலவீனம். பின்னணி இசை சற்று தொய்வை ஏற்படுத்தினாலும் வசனங்கள் அதை மறைத்துவிடுகிறது.
 
மேலும் இந்த திரைப்படம், 12 Angry Men என்ற ஹாலிவுட் படத்தின் ஈர்ப்பிலும், சாயலிலும் உள்ளது. வாய்மை முழுவதும் வசனத்தின் அடைப்படையை கொண்ட படமாக உள்ளது. படத்தின் முக்கிய சிறப்பாக இருப்பது 95 நிமிடத்தில் படைத்தை நிறைவு செய்தது தான். கதைக்கு தேவையில்லாததை தவிர்த்து கதைக்கு தொடர்புடைய பகுதி மட்டும் ஆழமாக படமாக்கியுள்ளார் இயக்குனர். ஆக்‌ஷன் மற்றும் வசனங்கள் விரும்பும் ரசிகர்களுக்கு வாய்மை தனித்துவம்.
 
மொத்தத்தில் வாய்மை - வசனம் பேசும் திரைப்படம்
 
ரேட்டிங்: 2.5/5
அடுத்த கட்டுரையில்