கேன்சர் நோயாளிகளுக்காக மொட்டையடித்துக் கொண்ட பெண் இயக்குநர்

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (18:44 IST)
கேன்சர் நோயாளிகளுக்காகத் தன்னுடைய தலைமுடியைத் தானமாக அளித்துள்ளார் பெண் இயக்குநர் ஒருவர்.


 

 
கலையரசன், காளி வெங்கட் நடித்த ‘ராஜா மந்திரி’ படத்தை இயக்கியவர் உஷா கிருஷ்ணன். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நீண்ட கூந்தலை விரும்பும் பெண்களுக்கு மத்தியில், வித்தியாசமான எண்ணம் கொண்டவராக இருக்கிறார் இவர். தன்னுடைய தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்குத் தருவதற்காக மொட்டை போட்டுள்ளார்.
 
“நாம் தலைமுடியை வெட்டினாலோ, மொட்டை போட்டாலோ சீக்கிரம் வளர்ந்துவிடும். ஆனால், கேன்சர் நோயாளிகளுக்கு அப்படியல்ல. ஒருமுறை முடி கொட்டிவிட்டால் அவ்வளவுதான். மறுபடியும் முளைக்கவே முளைக்காது. விக் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றால், ஒரு விக் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். சாதாரண மனிதர்களால் அவ்வளவு விலை கொடுத்து விக் வாங்க முடியாது. எனவே, என்னாலான உதவியாக தலைமுடியைத் தானம் செய்துள்ளேன்” என்கிறார் உஷா கிருஷ்ணன்.
அடுத்த கட்டுரையில்