லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் முதல் படம்.. ஹீரோ பெயர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (18:33 IST)
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்றும் அந்நிறுவனத்தின் பெயர் ஜி ஸ்குவாட் என்று அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம். மேலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் முதல் படத்தில் ’உறியடி’ விஜயகுமார் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அப்பாஸ் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 
 
கோவிந்த் வசந்தா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட பிற நட்சத்திரங்களின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது குறித்த போஸ்டரை இன்று பட குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்