காதலியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்தவர் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran

திங்கள், 27 அக்டோபர் 2025 (12:57 IST)
டெல்லி காந்தி விஹார் பகுதியில் 32 வயதான ராம்கேஷ் என்ற யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாரானவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், மீனாவுடன் இணைந்து வாழ்ந்த காதலி உட்பட மூன்று பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
 
முதலில் ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என கருதப்பட்ட இந்த சம்பவம், விசாரணையில் திட்டமிட்ட கொலை என்று அம்பலமானது.
 
ராம்கேஷ் ரகசியமாக தனது காதலியான அமிர்தா சவுகானின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்ததை அவர் நீக்க மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அமிர்தா, தனது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் இணைந்து ராம்கேஷை கொல்ல திட்டமிட்டார்.
 
அக்டோபர் 6ஆம் தேதி இரவு, மூவரும் ராம்கேஷ் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர், தடயவியல் மாணவியான அமிர்தா, கொலையை மறைக்க, ராம்கேஷ் உடல் மீது நெய், எண்ணெய் ஊற்றி, கேஸ் சிலிண்டர் வால்வை திறந்து வெடிவிபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
 
சிசிடிவி காட்சிகள் மற்றும் அமிர்தாவின் செல்போன் இருப்பிடத்தை கொண்டு, அமிர்தா அக்டோபர் 18 அன்றும், மற்ற இருவரும் அக்டோபர் 21 மற்றும் 23 அன்றும் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் கொலை, சதி, மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்