என் குழந்தைக்கு வயது 32… தேவர் மகன் படம் குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

vinoth

திங்கள், 27 அக்டோபர் 2025 (09:55 IST)
தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் தேவர் மகன் படத்துக்கு என்றும் நிலையான இடம் உண்டு. காட்பாதர் படத்தைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை, கமல்-சிவாஜி காம்பினேஷன், இளையராஜாவின் இசை, பி சி ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு என பல்வேறு மாஸ்டர்களின் கைவண்ணத்தில் உருவானப் படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள போற்றி பாடடி பொன்னே எனும் பாடலால் தென் தமிழகத்தில் பல சாதி கலவரங்கள் நடைபெற்றன. சாதி மற்றும் வன்முறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் மூலமே வன்முறைகள் உருவானது விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்றளவும் சாதிப் போற்றி பாடலாக இருந்து வரும் அந்த பாடலுக்கு மன்னிப்புத் தெரிவித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் ரிலீஸான போது இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த படத்துக்கு பதில் சொல்லும் படம்தான் என்னுடைய ‘மாமன்னன்’ திரைப்படம் எனத் தெரிவிக்க அது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் தற்போது தேவர் மகன் திரைப்படம் ரிலீஸாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பலரும் அதைப் பகிர்ந்து புகழ்பாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் “என் குழந்தைக்கு வயது 33. அதை உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நான்” என நெகிழ்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்