சூப்பர் ஸ்டாரின் அனைத்துப் படங்களும் சூப்பரா எனத் தெரியவில்லை… பா ரஞ்சித் ஆவேசம்!

vinoth

திங்கள், 27 அக்டோபர் 2025 (09:48 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பைசன். இந்த படமும் ப்ரதீப் ரங்கநாதனின் ட்யூட் படமும் ஒரே சமயத்தில் வெளியானது. எனினும் பைசனும் கவனிக்கத்தக்க அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் முதல் வாரத்தில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனரும் ‘பைசன்’ படத்தின் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் பேசும்போது தொடர்ந்து தன் மீதும், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் மீதும் வைக்கப்படும் அவதூறுகள் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “நான் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கபாலி’ படத்தின் போது மோசமான விமர்சனங்கள் வந்தன. ரஜினி சாரை வைத்து எப்படி SC வசனத்தை பேசவைக்கலாம் என்றார்கள். இதுபோன்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றே தெரியவில்லை. கபாலி படம் ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய் இலாபம் சம்பாதித்தது. அந்த படத்தின் திரைக்கதையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன். சூப்பர் ஸ்டார் நடித்த மற்ற படங்கள் எல்லாம் சூப்பரானப் படங்களா என எனக்குத் தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்