பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!... டைட்டில் அறிவிப்பு!

vinoth

புதன், 17 செப்டம்பர் 2025 (16:26 IST)
தென்னிந்திய சினிமாவில் நன்கறியப்பட்ட நடிகராக இருக்கிறார் உன்னி முகுந்தன். மலையாளப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘மார்கோ’ திரைப்படம் கண்டனங்களைப் பெற்றாலும், வசூலை வாரிக் குவித்தது. தமிழிலும் அவர் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் உன்னி  முகுந்தன் அடுத்த பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் மோடியாக நடிக்கவுள்ளார். இன்று மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மா வந்தே என்று இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்