தன்பால் ஈர்ப்பாளர்களை கேவலமாக பேசிய பிக்பாஸ் போட்டியாளர்! வெடித்து சிதறிய மோகன்லால்!

Prasanth K

புதன், 17 செப்டம்பர் 2025 (10:33 IST)

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் தன்பால் ஈர்ப்பாளர்களை கேவலமாக பேசியதால் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் மோகன்லால் ஆவேசமாக பேசியது வைரலாகியுள்ளது.

 

பல மொழிகளிலும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில் மலையாளத்தில் இந்த ஷோவை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த சீசனில் அதீலா, நூரா என்ற இரு பெண்கள் அந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள நிலையில் அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்களாக நடந்துக் கொள்வதாக சர்ச்சைகள் வெடித்துள்ளது.

 

அந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள லட்சுமி என்பவர் அவர்களை பற்றி பேசியபோது “இந்த மாதிரி விஷயங்களை சமுதாயத்தில் வரவேற்க கூடாது. இவற்றை பிக்பாஸ் போன்ற சர்வதேச பொது மேடைகளில் நார்மலைஸ் செய்யக்கூடாது. இவர்களை யாரும் வீட்டில் கூட சேர்க்க மாட்டாங்க” என பேசியுள்ளார்.

 

இதனால் கோபமடைந்த மோகன்லால் வார இறுதியில் லட்சுமியை துவைத்து எடுத்தார். லட்சுமியை எச்சரித்து பேசிய அவர் “தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்பது அவர்கள் தனிப்பட்ட விருப்பம் அதை கேள்வி கேட்க நீங்கள் யார்? எல்லாரும் இங்கு வாழ உரிமை உள்ளது. நானும், இந்த நிகழ்ச்சியும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் ஆதரவான கருத்திலேயே இருக்கிறோம். உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால் எதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள். அவர்களை யாரும் வீட்டிற்குள் சேர்க்கமாட்டார்கள் என நீங்கள் எப்படி சொல்லலாம். நான் என் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். உங்களால் அவர்களோடு இருக்க முடியாவிட்டால் வெளியேறுங்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

"Whether someone is straight, lesbian, or gay, it's their choice. Everyone has the right to live their life as they see fit. No one should be questioned about it; first, respect humans. @Mohanlal Sir, the way you handled this is truly amazing! ????????#BiggBossMalayalam" pic.twitter.com/pNVOPNoTHE

— Ꮇᴀᴅʜᴀɴ (@_MadhanKMurali) September 14, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்