பிரமாண்ட இயக்குனரின் பாராட்டை பெற்ற இரண்டு புது படங்கள்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:42 IST)
இந்திய சினிமாவே கொண்டாடப்போகும்  படம் ரஜினியின் 2.0. இப்படம்  ரூ. 450 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் VFX வேலைகள் அதிகம் என்பதாலேயே பட ரிலீஸ் தள்ளிப்போகிறது.
 
கோலிவுட்டில் விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ ஆகிய 2 படங்கள் சமீபத்தில் வெளியானது. இதில் ‘96’ படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். மக்கள் செல்வனுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். 
 
‘ராட்சசன்’ படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.
 
இந்நிலையில், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த இரு படங்களையும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பார்த்து ரசித்து பாராட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்