திரு இயக்கத்தில் கார்த்திக் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. ரெஜினா ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தில், இயக்குநர்களான மகேந்திரன் மற்றும் அகத்தியன் இருவரும் நடிக்கின்றனர். இவர்கள் இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், திருவின் மாமனார் தான் அகத்தியன் என்பது சுவாரசியமான விஷயம். “அகத்தியன் சார் தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்கள் இயக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது இதுதான் முதல்முறை. இந்தப் படத்தில் கார்த்திக் சாரின் நண்பராக அகத்தியன் சாரும், பிசினஸ்மேனாக மகேந்திரன் சாரும் நடித்துள்ளனர்” என்கிறார் திரு.