உண்மையான 2.0 அக்ஷய் குமார் இவர்தான்! - இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:09 IST)
2.0 படத்தில் அக்ஷய் குமாரின் கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளளது.

 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதிலும் வெளியாகி அதன் பிரம்மாண்டத்தாலும், ரஜினிகாந்த்தின் ஸ்டைலான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
 
600 கோடி பட்ஜெட்டில் உலகம் முழுவதிலும் சுமார் 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் 2.0 படம் வெளியாகி வசூல் சாதனை குவித்து வருகிறது. 
 
ரஜினிக்கு ஈடாக பிரமாண்ட நடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் படத்தில் பறவை வடிவில் பலரைக் கொல்லும் பறவைக் காதலராக 'பக்ஷிராஜன்' என்ற பாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார் . 'பக்ஷி' என்றால் பறவை என்பதும் அந்தப் பெயருக்கு 'பறவை அரசன்' என்ற அர்த்தமும் எளிய வகையில் ரசிகர்களுக்குப் புரியும். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , 2.0 படத்தில் இடம்பெற்ற அக்ஷய் குமாரின் தோற்றம் கதாபாத்திரம் உள்ளிட்ட அனைத்தும் மறைந்த பறவையியல் மேதையான சலிம் அலியைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. 
மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள அக்ஷய்  குமாரின் மேக்கப் சாயலும் அவரையே  தழுவி இருந்தன. பிரம்மாண்டம் மட்டுமல்லாமல் கதைக்கு ஏற்ற ஆராய்ச்சி செய்த இயக்குனர் ஷங்கரின் இச்செயல் நிச்சயம் பாராட்டிற்குரியது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்