த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய பரமபதம் விளையாட்டு என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கும் மேலாக படம் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது.