கமல் மணிரத்னம் படத்தில் ஹீரோயின் இவர்தானா? லேட்டஸ்ட் தகவல்!

புதன், 13 செப்டம்பர் 2023 (13:37 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்