நடிகர் மாரிமுத்து, சின்னத்திரை நிகழ்ச்சியான எதிர் நீச்சலில் நடித்து வந்த நிலையில், இன்று அவரது மறைவுக்கு படக்குழுவினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் கூறி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டது அவரது உடல். நாளை காலை 10 :30 மணிக்கு அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.