விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் இருப்பதை உறுதி செய்த திரிஷா!

வியாழன், 9 நவம்பர் 2023 (09:46 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா லியோ படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். இப்போது அந்த நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக மீண்டும் அஸர்பைஜான் பறந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, “நானும் அர்ஜுன் சாரும் சேர்ந்து நடிக்கும் இன்னொரு படம் உருவாகி வருகிறது. விரைவில் அந்த அப்டேட்கள் வரும்” எனக் கூறியுள்ளார். லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் இருவருக்கும் சேர்த்து காட்சிகள் இல்லை. இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்திலும் அர்ஜுன் இருப்பதை திரிஷாவின் இந்த பேச்சு உறுதி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்