அவருடைய பேச்சு காமெடியாக இருந்தாலும் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாக பலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது தான் மன்சூர் அலிகான் வீடியோவை பார்த்தேன். என்னுடன் அவர் திரையில் இணைந்து நடிக்க விருப்பப்படலாம். ஆனால் இதுவரை அவருடன் நடிக்க வில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல். இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் இவர் போன்ற நபர்களால் தான் மனித குலத்திற்கே அவப்பெயர் என்று தெரிவித்தார். த்ரிஷாவின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்