நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தற்போது செல்ஃபி என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து வர்ஷா பொல்லாமா மற்றும் கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளார்.
இப்படத்தை மதிமாரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை சபரீச் என்பவர் தயாரிக்க கலைப்புலி எஸ்.தானு வெளியிடுகிறார்.
இப்படத்தின் புதிய அப்டேட்டை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். தந்து டுவிட்டர் பக்கத்தில் அவர், செல்ஃபி படத்தின் டிரைலர் நாளை மாலை 4;40 க்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.