பவன் கல்யாண் பிறந்த நாளால் மொத்தம் 8 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (18:17 IST)
பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்கனவே 3 பேர் பலியாகினர் என்ற செய்தியை இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பவன் கல்யான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 5 ரசிகர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவன் கல்யான் ரசிகர்கள் பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக கொண்டாடி விட்டு தங்களுடைய வீடுகளுக்கு வாகனமொன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பவன் கல்யான் ரசிகர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே நேற்று இரவு பவன் கல்யாண் ரசிகர்கள் 3 பேர் கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி பலியான நிலையில் இன்று மேலும் 5 ரசிகர்கள் பலியாகியுள்ளதால் மொத்தம் 8 ரசிகர்கள் பலியாகி உள்ளனர் இந்த செய்தி பவன் கல்யாண் மற்றும் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சினிமா மோகத்தில் சினிமா நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தி தங்களுடைய விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து வருவதாகவும், சினிமா மோகத்தில் தமிழகத்திற்கு எந்த அளவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் சளைத்தது அல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்