ஜி.வி பிரகாஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் செய்கிறார் நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:49 IST)
ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிட இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான “சிவப்பு, மஞ்சள், பச்சை” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அவர் நடித்துள்ள 100% காதல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தான் கதாநாயகனாக நடிக்கும் 7வது படத்திற்கான வேலைகளையும் முடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

சதீஷ் செல்வகுமார் என்னும் புதிய இயக்குனரின் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் ”தமிழ் புலவர் பராக்!! பராக்!! ட்விட்டர் உலக டான் ChennaiIPL  டீமோட செல்ல பிள்ளை. harbhajan_singh எங்க படத்தோட First look Release பண்றது பெருமை.Thanks a lot #Bhajji for accepting it we are all excited & First time for Cinema.Lots of love...” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோது ஹர்பஜன் சிங் தமிழ் கற்றுக் கொண்டார். அதற்கு பிறகு அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்து வந்தார். அவரின் தமிழ்பற்று தமிழ் வருட பிறப்புக்கு வாழ்த்து சொல்லும் அளவுக்கு பிரபலம். அதனாலேயே தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை “தமிழ் புலவர்” என்று செல்லமாய் அழைப்பது வழக்கம்.

நாளை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடும் ஹர்பஜன் சிங் அதிலும் தமிழிலேயே எழுதி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை ஒரு கிரிக்கெட் வீரர் வெளியிடுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்