லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 400 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் ரிலீஸூக்கு முன்பே விக்ரம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸூக்குப் பிந்தைய பிளாக்பஸ்டர் ஹிட்டால் அந்த லாபம் 127 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர படத்துக்காக அவரின் சம்பளத்தையும் சேர்த்தால் 170 கோடிக்கும் மேல் அவருக்கு லாபம் கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.