பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி: மும்தாஜ் கண்ணீர்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (23:10 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார்

அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனனி வெளியேற்றம் குறித்து கண்ணீருடன் கூறிய மும்தாஜ், ஃபினாலே டிக்கெட் பெற ஜனனி அதிகம் கஷ்டப்பட்டார். குறைந்தபட்சம் அவர் மூவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

வெளியே வந்த ஜனனி, 'தான் இதுநாள் வரை தாக்குபிடித்ததே தனக்கு மகிழ்ச்சி என்றும் தன்னை ஆதரித்து ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்