தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தமிழக அரசு தடையா? பாஜக பிரபலத்தின் சர்ச்சை டுவிட்

செவ்வாய், 15 மார்ச் 2022 (17:32 IST)
பிரதமரே பாராட்டிய தி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்கப் போவதாக பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் 
 
 தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் குழுவினர்களை பிரதமர் மோடி அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படம் ரோகினி தியேட்டர்களில் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசு தடை செய்ய முயற்சி செய்து வருவதாக பாஜக பிரபலம் அமர் பிரசாத் ரெட்டி தனது நூலில் பதிவு செய்துள்ளார்
 
இந்த டுவிட்டுக்கு  தற்போது அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 தமிழக அரசுக்கு  தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றும் வேண்டுமென்றே வதந்தியை பரப்பும் அமர் பிரசாத் ரெட்டிyஐ கைது செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்