இளையதளபதி விஜய் பிறந்த நாள் கடந்த மாதம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்றாட சாப்பாடு, உடை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கின்றது. இந்த குழந்தைகளை கட்டிக்காக்கும் காப்பகங்கள் பெரும்பாலும் பொருளாதார திண்டாட்டத்தில் தான் உள்ளன. இதனால் இந்த குழந்தைகளின் சினிமா பார்க்கும் கனவு எப்போதாவதுதான் நிறைவேறும்
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சென்னை ரோஹினி திரையரங்கில் 'துப்பாக்கி' சிறப்பு காட்சிக்காக ஏற்பாடு செய்தனர். இந்த திரைப்படத்தை நூற்றுக்கும் மேலான ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்களுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.