இந்நிலையில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ள ஹெச் வினோத், அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ள அவர், எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் துணிவு வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் வினோத் இப்போது கமல்ஹாசனின் பதிலுக்காக காத்திருக்கிறாராம். கமல் இப்போதே படத்தைத் தொடங்கலாம் என சொல்லிவிட்டால் முதலில் கமல் படத்தைத் தொடங்குவார் எனவும், இல்லையென்றால் முதலில் தனுஷ் படத்தை தொடங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.