பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என்றும் அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
3 மணி நேர ரன்னிங் டைம் என்பதை மைனஸ் ஆக கருதப்படும் நிலையில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது மேலும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளியான பிரபாஸ் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததை அடுத்து இந்த படத்தை தான் மலைபோல் நம்பியுள்ளார். இந்த படமும் பிரபாஸுக்கு தோல்வியடைந்தால் அவரது திரையுலக வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.