கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த படம் இதுதான்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:33 IST)
சூப்பர்  ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படம் யாருடன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


 
தனது கனவுப்படமான பேட்ட படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய சந்தோஷத்தில் கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார். இவர் பேட்ட படம் வெளியான முதல் காசி தியேட்டருக்கு சென்று ரஜினி ரசிகனைப்போல் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
இந்நிலையில் பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் பேட்ட படத்துக்கு முன்பே செய்ய வேண்டியது.  2017ம் ஆண்டு மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதே இந்த புராஜெக்ட்டை அறிவித்தார்கள். ஆனால்  பேட்ட படம் காரணமாக கிடப்பில் போட்டு இருந்தார்கள். இப்போது தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அப்படம் உருவாக உள்ளது. இதில்  ஹாலிவுட் நடிகர்களை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  Robert Di Nero  அல்லது Al Pacino நடிக்கலாம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்