‘பாகுபலி’யின் இடைவேளை, எப்படி உருவானது தெரியுமா?

சனி, 6 மே 2017 (17:45 IST)
‘பாகுபலி’ படத்தின் இடைவேளைக் காட்சி உருவான விதம் குறித்து சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.


 

 
‘பாகுபலி’யின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இடைவேளைக் காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. ‘பாகுபலி… பாகுபலி…’ என மக்கள் எழுப்பும் குரல், நம்மை பாப்கார்ன் வாங்கக் கூட எழுந்தரிக்க விடாது. அந்த அளவுக்கு இரண்டு பாகங்களின் இடைவேளையுமே உணர்ச்சிகரமானதாக இருக்கும்.
 
முதல் பாகத்தின் இடைவேளையில், கீழே விழும் பல்வாள் தேவனின் சிலையை ஒற்றைக்கையால் பாகுபலி பிடித்து நிப்பாட்டும்போது, அதைப் பார்த்த மக்கள் ‘பாகுபலி… பாகுபலி…’ என உரக்க குரல் எழுப்பிக் கொண்டே இருப்பர். இரண்டாம் பாகத்தின் இடைவேளையில், பாகுபலி சேனாதிபதியாக பொறுப்பேற்கும்போது, ‘பாகுபலி… பாகுபலி…’ என கத்திக்கொண்டே, தங்கள் கையில் உள்ள ஆயுதங்களைத் தரையில் தட்டுவார்கள். அந்த அரண்மனையே அதிரும்.
 
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் இசை வெளியீட்டு விழா ஒன்றுக்குச் சென்றிருக்கிறார் ‘பாகுபலி’ கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத். பவன் கல்யாண் பேச எழுந்தபோது, அங்கிருந்த அவருடைய ரசிகர்கள், ‘பவர் ஸ்டார்… பவர் ஸ்டார்…’ என நீண்ட நேரத்துக்கு குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்களாம். அதைப் பார்த்துதான் அந்தக் காட்சியை எழுதியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.

வெப்துனியாவைப் படிக்கவும்