எப்படி கம்பீரமாக இருந்த மனிதன் இப்படி குழந்தை மாதிரி ஆகிவிட்டாரே? எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்கிறேன். தன்னை எப்படி வளர்த்தார் என நீண்ட நேரம் எமோஷனலாக பேசினார் சிநேகன். 'கல்யாணம் செய்துகொள்' என சினேகனின் தந்தை தொடர்ந்து கூற, வீட்டில் இருந்த மற்றவர்கள் 'நாங்க இருக்கோம்' கண்டிப்பா இந்த வருஷம் கல்யாணம் நடத்துவோம் என கூறினர்.
சக்தி பேசும்போது சிநேகன் என் சகோதரர் மாதிரி, 'ஆல்ரெடி பொண்ணு ரெடி..பேசியாச்சு' என கூறினார். அது யார் என்பது தான் தற்போது அனைவரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. மேலும் சிநேகனின் தந்தைக்கு 94வயது என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.