திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் நடிக்க பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. சுசி கணேசன் படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
"தற்போது கோலிவுட்டில் புதிய இளைஞர்கள் இசையமைப்பாளர்களாக உருவாகி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் நான் நினைக்கும் மெலடி இசை இல்லை. எனது திருட்டு பயலே படத்திற்கு மெலடி கிங் வித்யாசாகரின் இசை பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தேன்" என்று தெரிவித்தார்.