திருச்சிற்றம்பலம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்கள்தான்?

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 19 ஆம் ரிலீஸ் ஆகி வெற்றி படமாக அமைந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்  வுண்டர்பார் நிறுவனத்தின் மூலமே இந்த படத்தை தயாரிக்க இருந்தாராம் தனுஷ். அப்போது நித்யா மேனன் வேடத்தில் நயன்தாராவையும், ராஷி கண்ணா வேடத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் வேடத்தில் சமந்தாவையும் நடிக்கவைக்க திட்டமிருந்தனராம். ஆனால் படம் சன் பிக்சர்ஸ் கைக்கு போனதும் மாற்றம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்