கார்த்திக்-கவுதம் கார்த்திக் படத்தில் 2 தேசியவிருது இயக்குனர்கள்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (10:45 IST)
நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு MR.சந்திரமெளலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த படத்தின் நாயகிகளாக ரெஜினா மற்றும் வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் அகத்தியன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இயக்குனர் அகத்தியன், இந்த படத்தின் இயக்குனர் திருவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியனின் மகள் கார்த்திகாவை திரு திருமணம் செய்துள்ளார். அகத்தியனின் இன்னொரு மகள் நடிகை விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்