தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 படத்தின் கதை தன்னுடையது என்றும், அது திருடப்பட்டது எனவும் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் என்பவர் புகார் கூறியிருந்தார்.
பாரதிராஜாவும் தன் உதவியாளரின் புகாருக்கு ஆதரவு தெரிவித்து இந்தக் கதை திருடப்பட்டதுதான் எனக் கூறியிருந்தார்.
அதை மறுத்து 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பிரேம் குமார்,பாலாஜி மோகன் தியாகராஜன் ,குமார ராஜா மருது பாண்டியன் ஆகியோர் கூட்டாக சென்னையில் உள்ள வட பழனியில் செய்தியாளர்களீடம் கூறினார்கள்.
அப்போது பிரேம்குமார் கூறியதாவது:
சுரேஷ் சம்பந்தமே இல்லாமல் 96 கதைக்கு சொந்தம் கொண்டாடுகிறார். அதற்கு பாரதி ராஜாவும் ஆதரவு அளித்து வருகிறார். மேலும் பாரதிராஜா தன்னை தகாத வார்த்தகளால் பேசியதாகவும் பிரேம் வருத்தம் தெரிவித்தார். மேலும் 96 படக் கதைக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதை பிரேம் குமார் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதனால் தமிழ் திரையுலகில் தற்போது ஏகத்துக்கும் சினிமா திருட்டுக் கதை என்பது பரவலாகிக் கொண்டிருக்கின்றது.
இதற்கு கலைத்துறையான சினிமாவில் பணிபுரிவோரிடம் ஒற்றுமை இல்லாததே காரணம்.
எந்த ஒரு துறையிலும் ஒற்றுமை இல்லை எனில் அது வளர்ச்சிகான பாதைகளை கட்டமைக்காது என்பது இவர்களுக்கு புரிந்தால் சரி என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.