மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை மனித உரிமை: ஒடிசா உயர்நீதிமன்றம்

சனி, 29 ஜூலை 2023 (18:47 IST)
மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை மனித உரிமை என  ஒடிசா உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை 2013ம் ஆண்டில் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். 
 
ஆனால் அவரின் விடுப்பை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். மேலும் மகப்பேறு விடுப்பு, தொகுதி மானியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பொருந்தாது எனக் காரணம் கூறியுள்ளனர். 
 
இதுகுறித்து ஆசிரியை மனுதாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையில் 4 வாரங்களுக்குள் ஆசிரியரின் விடுப்பை அனுமதிக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை மனித உரிமை என்றும்  ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்