ஜூலை 31ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திங்கள், 24 ஜூலை 2023 (16:43 IST)
ஜூலை 31ஆம் தேதி தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 
 
ஜூலை 31ஆம் தேதி ஆடித்தவசு திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
 மேற்கண்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சமந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மேற்கண்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று மேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்