தெலுங்கு படத்தால் அஜித் படத்தை இழந்த சாய் பல்லவி

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (16:47 IST)
சாய் பல்லவிக்கு அதிர்ஷ்டம் நூலிழையில் கைமாறிப் போகிறது.  மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் இவர்தான் நாயகியாக முதலில் அறிவிக்கப்பட்டார்.


 


பிறகு மெச்சூரிட்டி போதாது என்று சாய் பல்லவியை நீக்கிவிட்டு அதிதி ராவை ஒப்பந்தம் செய்தனர். தற்போது அஜித் பட வாய்ப்பையும் இழந்துள்ளார்.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகள். இரண்டாவது நாயகியாக நடிக்க சிவா சாய் பல்லவியை அணுகியுள்ளார். அவரது துரதிர்ஷ்டம், சிவா கேட்ட தேதிகளை தெலுங்கு படம் ஒன்றுக்கு ஏற்கனவே ஒதுக்கி ஒப்பந்தமும் போட்டிருந்திருக்கிறார் சாய் பல்லவி. அதனால், அஜித் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு கைநழுவி போயுள்ளது.
 
துரதிர்ஷ்டத்திலும் ஓர் அதிர்ஷ்டம்... தெலுங்கில் சாய் பல்லவி நடிப்பது சேகர் கம்மூலாவின் இயக்கத்தில். தமன்னாவுக்கு ஹேப்பி டேய்ஸ் மூலம் வாழ்வளித்தவர் சேகர் கம்மூலா என்பது முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்