வடிவேலுக்கு பதில் சூரி - படத்தில் இருந்து தூக்குமளவிற்கு அப்படி என்ன கோபம் ரஜினிக்கு?

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (17:22 IST)
தமிழ் சினிமாவில் பொக்கிஷ நடிகரான வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் அரை டஜன் படங்களில் தோன்றி இன்றளவும் பலரது ஃபேவரைட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படம்  ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்னைகளால் படம் பாதியிலேயே நின்று போனது. இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டதாக கூறப்பட்டது.   
 
இந்த கேப்பில் கிடு கிடுவென வடிவேலுவின் இடத்தை நிரப்ப முயற்சித்த சந்தானம் , சூரி, யோகி பாபு ஆகோயோர் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தனர். இருந்தாலும் வடிவேலு ஸ்டைல் தனி தான் என ரசிகரக்ள் ஏக்கத்துடன் அவர்களின் காமெடியை பார்த்தனர். எப்போது மீண்டும் வடிவேலு நடிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில் ரஜினியின்  அடுத்த படத்தில் வடிவேலு தான் காமெடி நடிகர் என தகவல் பரவியது. இதனால் சந்திரமுகி படத்திற்கு பிறகு தலைவர் - வைகைப்புயல் கப்போ அமர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில்  இந்த படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிகர் சூரி நடிக்கவிருக்கிறார் என சன் பிச்சர் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 
 
இந்நிலையில் தற்போது இதற்கான காரணம் தான் என்ன என அலசி ஆராய்ந்ததில், வடிவேலு பேட்டி ஒன்றில் ரஜினியின் ராணா திரைப்படத்தை  "ராணாவாவது, காணாவாவது" என கிண்டலடித்து நக்கல் செய்துள்ளார். அப்போதிலிருந்தே ரஜினிக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. அதனால் தான் என்னவே இந்த படத்திலிருந்து வடிவேலு விலகினாரோ என கேள்வி எழும்புகிறது. ஆனால்,  ரஜினி இதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தமாட்டார். அவருக்கு வடிவேலு மீது எந்த ஒரு தனிப்பட்ட வருத்தமும் எல்லை , மேலும் படத்தில் நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பு அனைத்தும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடையதே என்று ஒரு தரப்பு கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்