ஏற்கனவே படத்தின் வியாபாரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து விட்டது. தமிழ் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் இப்போது வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐங்கரன் நிறுவனம் தமிழில் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் விஜய், பூஹா ஜெக்டெ உள்ளிட்ட நடிகர் ஒரு அலுவலகத்தில் நிற்பது போன்ற புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகிறது. இந்தக் காட்சி இப்படத்தின் மிகப்பெரிய காமெடியாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ரசிகர்களைப் போலவே நாங்களும் படத்தின் டிரைலருக்கான காத்திருக்கிறோம் நண்பார் எனப் பதிவிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது.