புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்ற நடிகர் விஜய்- வைரல் வீடியோ
சனி, 26 பிப்ரவரி 2022 (15:57 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவர் இன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.#PuneethRajkumar#Beast
அவருக்கு இந்தியத் திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு வெளி நாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவர் இன்று புனித் ரராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.