விக்ரம் ஆடியோ ரிலீஸ் நடந்த இடத்தில் ‘தி லெஜண்ட்’ பட நிகழ்ச்சி… வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:23 IST)
அருள் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது 

வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ஆடியோ வெளியாக உள்ளது. சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் இங்குதான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்