'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு

புதன், 19 செப்டம்பர் 2018 (11:16 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் சர்கார் படத்தின் புதுப்புது தகவல்கள் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது

அந்த வகையில் சற்றுமுன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் 'சர்கார் கொண்டாட்டத்தின் முதல் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என்பதுதான் அந்த தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் பாடல் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் இசை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்