ரூ.100 கோடி வசூலித்த ''புரோ '' படம்.. சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் சவால்

புதன், 2 ஆகஸ்ட் 2023 (21:00 IST)
நடிகர் பவன் கல்யாணின் புரோ படம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளா நிலையில், அமைச்சர் அம்பாட்டி ராம்பாபு, ஏன் மறைமுகமாக தாக்க வேண்டும்? நேரடியாக அரசியல் படம் எடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில், திரிவிக்ரம் சீனிவாஸ் திரைக்கதை –வசனத்தில் கடந்த  ஜூலை 28 ஆம் தேதி வெளியான படம் புரோ. இப்படத்தை விஸ்வபிரசாத் விவேக் ஆகியோர் தயாரித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது.

இந்த நிலையில்,  இப்படத்தில் அம்மாநில அமைச்சர் அம்பாட்டி ராம்பாபுவை கிண்டலடிக்கும்  ஒரு கேரக்டர் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. படத்தில் இந்தக் கேரக்டரில் பிருத்வி நடித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் அம்பாட்டி ராம்பாபு , ஏன் மறைமுகமாக தாக்க வேண்டும்? நேரடியாக அரசியல் படம் எடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தெலுங்கு சினிமா எழுத்தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இப்படி மீண்டும் செய்தால் தக்க பாடல் புகட்டப்படும் என்று கூறியுள்ளார்.

 நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சமீபத்தில், நடிகர் பிருத்வி இணைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்