சேலத்தில் பேட்ட, விஸ்வாசம் வெளியான பிரபல திரையரங்குக்கு சீல் வைப்பு!

திங்கள், 14 ஜனவரி 2019 (07:06 IST)
சேலத்தில் விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்கள் திரையிடப்பட்டிருந்த பிரபல திரையரங்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


 
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் ஆஸ்கார்ஸ் என்ற திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொங்கல் பண்டிகையை பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  
 
நேற்று மாலைக் காட்சிக்கு முன்னதாக அங்கு வந்த அதிகாரிகள், சினிமா காட்சிகளை நடத்துவதற்கான லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை எனக் கூறி சினிமா திரையிடக்கூடாது என தெரிவித்தனர்.
 
திங்கட்கிழமையன்று ஆவணங்களை சமர்ப்பித்து லைசென்ஸ் எடுப்பதாக தியேட்டர் மேலாளர்கள் கூறினார். அதனை ஏற்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து திரையரங்குக்கு சீல்வைத்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்