பிரபல இசையமைப்பாளரின் கார் திருட்டு; காவல் நிலையத்தில் புகார்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (10:18 IST)
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் திருட்டுப் போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். முக்கியமாக தமிழ்த் திரையுலகில் இவருக்கென தனி இடமுண்டு.
இந்நிலையில் யுவனின் விலை உயர்ந்த கார் திருட்டுப் போய் விட்டதாக, யுவன் சங்கர் ராஜாவின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது காரை, கார் ஓட்டுநரே திருடிச் சென்றுவிட்டதாகவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து காரை திருடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்